ஜனாதிபதி நாளை இந்தியா விஜயம் !
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை (15) முதல் எதிர்வரும் 17 திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.