அம்பாறையில் கட்டாக்காலி மாடுகள், நாய்களினால் போக்குவரத்துக்கு பாதிப்பு
கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களினால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து சிரமங்கள் தொடர்பில் பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளான நற்பிட்டிமுனை, பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, சாய்ந்தமருது மற்றும் நகரப்பகுதிகளில் அதிகளவான கட்டாக்காலி மாடுகள், நாய்கள் உலா வருகின்றன.
இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனமெடுத்து நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.