2034ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில் !
2034ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில் நடத்தப்படும் என ஃபிஃபா நிர்வாகக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் 2030ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தொடரை ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன.
தொடரின் 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 2030ஆம் ஆண்டு 3 போட்டிகள் ஆர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.
நேற்று இடம்பெற்ற ஃபிஃபா காங்கிரஸின் வாக்கெடுப்பில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஃபிஃபாவில் அங்கம் வகிக்கும் 211 நாடுகளின் பிரதிநிதிகள் தொலைகாணொளி ஊடாக இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
TAGS 2034 World CupArgentinaFIFAHot Newsmen's tournamentMoroccoParaguay and UruguayPortugalsaudi arabiaSouth AmericaSpainSri lankaworld cup