பாரியளவான போதைப்பொருளுடன் இருவர் கைது

பாரியளவான போதைப்பொருளுடன் இருவர் கைது

கஹதுடுவ பிரதேசத்தில் 05 கிலோ ஹெரோயின், 1.6 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 800 எக்ஸ்டஸி போதை மாத்திரைகளை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இவற்றின் பெறுமதி சுமார் 130 மில்லியன் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பொரளை, வனத்தமுல்ல பிரதேசத்தில் 02 கிலோ 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முல்லேரியா பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )