என்னை “சேர்” என்று அழைக்கவும்

என்னை “சேர்” என்று அழைக்கவும்

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்திய மூர்த்தியை அச்சுறுத்தும் வகையிலான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. 

இந்தக் காணொளியில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எனக் கருதப்படும் நபர், தன்னை ‘சேர்’ என அழைக்குமாறு வைத்தியசாலை பணிப்பாளரிடம் கோரிக்கை விடுப்பதாகத் தெரிகிறது. 

அதேவேளை, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக நேற்று முன்தினம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )