ஒரு லட்சம் குரங்குகளை மீண்டும் சீனாவுக்கு அனுப்ப யோசனை
ஒரு லட்சம் குரங்குகளை சீனாவிலுள்ள மிருகக்காட்சி சாலைகளுக்கு வழங்குவதற்கு தம்மால் முன்னெடுக்கப்பட்ட திட்டத்தை தற்போதைய அரசாங்கம் செயல்படுத்த வேண்டும் என்று முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்” நாட்டில் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. வருடாந்தம் 200 மில்லியனுக்கும் அதிகமான தேங்காய்களை குரங்குகள் நாசமாக்கின்றன.
எனவே, இந்நிலைமையை கட்டுப்படுத்த வேலைத்திட்டமொன்று அவசியம்.
ஒரு லட்சம் குரங்குகளை சீனாவிலுள்ள மிருகக்காட்சி சாலைகளுக்கு வழங்கும் திட்டத்தை நாம் செயற்படுத்த தயாரானவேளை சுற்றாடலியலாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களிடம் உரிய மாற்று திட்டம்கூட இல்லை. நடைமுறைக்கு சாத்தியமற்ற தீர்வுகளே அவர்கள் வசம் உள்ளன. எனவே குரங்குகளை சீன மிருக்காட்சிசாலைக்கு அனுப்பும் திட்டத்தை முன்னெடுக்குமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.