போதை பொருட்களுடன் மூவர் கைது
90 இலட்சம் பெறுமதியான ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் பொரலஸ்கமுவ, தெஹிவளை மற்றும் கொஹுவல பிரதேசங்களில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்ட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை மற்றும் கொம்பனி தெரு பிரதேசங்களைச் சேர்ந்த 40, 41 மற்றும் 54 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 708 கிராம் ஹெரோயின் மற்றும் 92 கிராம் குஷ் போதைப்பொருளை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இவர்கள் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள மற்றும் இந்நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு சொந்தமான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka