பதுளையில் பாவனைக்கு உதவாத 58 மூடை கோதுமை மா மீட்பு

பதுளையில் பாவனைக்கு உதவாத 58 மூடை கோதுமை மா மீட்பு

பதுளை மயிலகஸ்தென்ன பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் பாவனைக்கு உதவாத 58 கோதுமை மா மூடைகளை நேற்று (07) பதுளை மாநகரசபையின் சுகாதார அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த களஞ்சியசாலையை பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவர் வாடகை அடிப்படையில் பெற்று நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது.

கோதுமை மா கையிருப்பு சுகாதார அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், ​​எலிகளினால் கோதுமை மா மூடைகள் சேதப்படுத்தப்பட்டு இருந்ததாகவும், அதில் எலிகளின் சிறுநீர் மற்றும் எச்சங்கள் இருந்ததாகவும் சோதனையை மேற்கொண்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனையிடப்பட்ட களஞ்சியசாலை தொடர்பான சட்ட நடவடிக்கைகளை பதுளை நீதவான் நீதிமன்றம் மேற்கொள்ளவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )