பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சோதனை நடவடிக்கை
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை பகுதியிலுள்ள பழக்கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இறக்குமதியாளரின் விபரங்களின்றி உணவுப்பொருள் விற்பனை செய்தல் மற்றும் பாடசாலை உபகரணங்களின் விலையைக் காட்சிப்படுத்தாமல் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அடுத்த வருடம் ஜனவரி 15ஆம் திகதி வரை விசேட சோதனை நடவடிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சுமார் 1,750 கள பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டார்.
பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக உபுல் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.