உள்ளாட்சிசபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு தயார்
உள்ளாட்சிசபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு கிராம மட்டங்களில் ஆழமாக காலூன்ற வேண்டியுள்ளது எனவும், இதற்கான தயார் படுத்தல்களை மேற்கொள்ளுமாறும் கட்சி சகாக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆலோசனை வழங்கியுள்ளார்.
கீழ்மட்ட அரசியல் இயந்திரம் வலுவாக இருப்பதாலும், ஏற்பாட்டு சக்தி பலமாக இருப்பதாலுமே தேசிய மக்கள் சக்தியால் ஆட்சியை பிடிக்க முடிந்தாகவும், எனவே, கீழ்மட்ட அரசியல் இயந்திரத்தை கட்டாயம் வலுப்படுத்தியாக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், உள்ளாட்சிசபைத் தேர்தல் பற்றி ஆராயப்பட்டவேளையிலேயே மேற்கண்டவாறு எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரசியல் களத்தில் தேசிய மக்கள் சக்தியே தமது அணிக்குள்ள பிரதான அரசியல் எதிரியெனவும், அந்த எதிரியைவிட வலுமான திட்டங்களை வகுத்தால் முன்னோக்கி செல்ல முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.