மாவீரர் நினைவேந்தல் விடயத்தில் அரசின் நகர்வுகள் மோசமானவை – பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

மாவீரர் நினைவேந்தல் விடயத்தில் அரசின் நகர்வுகள் மோசமானவை – பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

மாவீரர் தின நினைவேந்தல் விடயத்தில் அரசாங்கத்தின் நகர்வுகள் மோசமானதாக அமைந்துள்ளதாக முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘மக்கள் தமது ஜனநாயக கடமையை இரண்டு தேர்தல்களிலும் முறையாக மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் அந்த ஆணையை பெற்றுக்கொண்ட அரசாங்கத்தின் நிர்வாகத்தின்
இயலாமையே வெளிப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தியினர் தம்மிடம் நாட்டை ஒப்படைக்குமாறும் தாம் திறன்பட
நாட்டை நிர்வகித்து காண்பிப்பதாகவும் கூறினர்.

ஆனால் அவ்வாறு இடம்பெற்றதாக தெரியவில்லை.

மாவீரர் தின நினைவேந்தலுடன் தொடர்புடைய விடயத்தில் அரசாங்கத்தின் பதில் மோசமானதாக அமைந்துள்ளது.

இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நகர்வுகள் தகவல் வழங்குபவர்களின் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொள்வதற்கு ஒப்பான செயல் என நீதிமன்றமே கூறியுள்ளது.

அதேபோன்று மாவீரர் தின நினை வேந்தல்கள் வடக்கு-கிழக்கில் 245 இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் 10 இடங்களில் பிரிவினைவாதத்துடன் தொடர்புடைய இலச்சினைகள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் விடயதானங்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஆனந்த விஜயபால பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

இருப்பினும் அதற்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
ஆனால் அந்த விடயத்தை காட்சிப்படுத்தும் வகையில் பதிவுகளை மேற்கொண்ட நால்வரை கைது செய்துள்ளனர் ‘ என முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )