டொனால்ட் லு – விஜித ஹேரத் இடையில் சந்திப்பு

டொனால்ட் லு – விஜித ஹேரத் இடையில் சந்திப்பு

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லுவிற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு டொனால்ட் லு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்கு அமெரிக்காவும் இலங்கையும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய வழிகள் குறித்து கலந்துரையாடியதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )