நாக சைதன்யா – ஷோபிதா திருமணம்

நாக சைதன்யா – ஷோபிதா திருமணம்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் ஆவார். தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள நாக சைதன்யா நடிகை சமந்தாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

எனினும், தவிர்க்க முடியாத காரணங்களில் திருமண வாழ்வில் பிரிவிதாக நாக சைதன்யா மற்றும் சமந்தா முறையே அறிவித்தனர்.

இதனையடுத்து நடிகர் நாக சைதன்யா  மற்றும் நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்யவுள்ளார் என்று நடிகர் நாகர்ஜுனா தெரிவித்திருந்தார். அதன்படி நாக சைதன்யாவுக்கு நடிகை சோபிதா துலிபாலாவுடன் நேற்று பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், திருமண புகைப்படங்களை பகிர்ந்து நாக சைதன்யா – சோபிதா துலிபலா ஜோடியை நாகர்ஜுனா வாழ்த்தியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )