361 மதுபானசாலைகளுக்கான அரசியல் இலஞ்சமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது

361 மதுபானசாலைகளுக்கான அரசியல் இலஞ்சமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது

கடந்த அரசாங்கத்தில் நாடு முழுவதும் 361 மதுபான சாலைகளுக்கான அரசியல் இலஞ்சமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க, பாராளுமன்றத்தில், நேற்று (04) தெரிவித்துள்ளார். 

 மேலும் அவர், “வடக்கு மாகாணத்திற்கு 32 மதுபான சாலைகளுக்கான அனுமதிகளும் கிழக்கு மாகாணத்திற்கு 22 மதுபான சாலைகளுக்கான அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன.   

கடந்த அரசில் அரசியல் இலஞ்சமாக பலருக்கு மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன  .அவற்றை வெளியிடும் எனக் கூறியிருந்தோம்.அதற்கமைய அந்த விபரங்களை இந்த சபைக்கு சமர்ப்பிக்கின்றேன். இதனை சகலரும் அறிந்து கொள்ள முடியும்

இந்த விபரத்தின்படி மேல் மாகாணத்தில் 110 மதுபானசாலைகளுக்கான அனுமதிகளும் தென்மாகாணத்தில் 48, வடக்கு மாகாணத்தில் 32, கிழக்கு மாகாணத்தில் 22,மத்திய மாகாணத்தில் 45,வட மத்திய மாகாணத்தில் 14,ஊவா மாகாணத்தில் 30 ,வடமேல் மாகாணத்தில் 30 சப்ரகமுவ மாகாணத்தில் 30 என 361 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று சில்லறை மதுபான விற்பனைக்கான அனுமதிகளாக

1.கொழும்பு 2

2.கம்பஹா 8

3.களுத்துறை 8

4.காலி 9

5.மாத்தறை 5

6.அம்பாந்தோட்டை 5

7.யாழ்ப்பாணம் 5

8.கிளிநொச்சி 16

9.வவுனியா 2

10.மன்னார் 2

11.திருகோணமலை 4

12.மட்டக்களப்பு 1

13.அம்பாறை 5

14.கண்டி 11

15.மாத்தளை 6

16.நுவரெலியா 8

17.அனுராதபுரம் 4

18.பொலநறுவை 3

19.புத்தளம் 6

20.குருநாகல் 8

21.பதுளை 9

22.மொனராகலை 7

23.இரத்தினபுரி 6

24.கேகாலை 2

என 172 அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவுக்கு வழங்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )