உடைத்த தேங்காயின் ஒரு பகுதியின் விலை அதிகரிப்பு
சந்தையில் தேங்காய்க்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளமையை தொடர்ந்து தற்போது பல பகுதிகளில் உடைத்த தேங்காயும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சில பகுதிகளில் உடைத்த தேங்காயின் ஒரு பகுதியின் விலையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேங்காய் ஒன்று தற்போது 200 ரூபாவுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம் உடைத்த தேங்காயின் ஒரு பகுதி 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
CATEGORIES Sri Lanka