IMF உடன்படிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் திருத்தப்பட்ட உண்மைகள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தெரியவரும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் “அடுத்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டும் என்று நாங்கள் கூறினோம். அதற்குள் திருத்தங்களைச் செய்யலாம் என்று நம்புகிறோம்.
ஆம், நாங்கள் திருத்தங்களைச் செய்துள்ளோம். அவர்களுடன் விவாதித்து திருத்தங்களை முன்வைத்தோம். அந்தத் திருத்தங்களின் உண்மைகளை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நாட்டு மக்கள் அறிந்துகொள்வார்கள்.
அனுபவமிக்க ரணில் விக்கிரமசிங்க எல்லா இடங்களிலும் VAT குறைக்கப்படவில்லை என்று கூறிச் செல்கின்றனர். VAT குறைக்கப்பட வேண்டும். VAT குறைக்கப்பட்டுள்ளது. யாரால் குறைக்க முடியும்? இது ஒரு பண சட்டமூலம்.
அவரும் நமது பிரதமருக்கு டியூஷன் கொடுக்க முயன்றார். பாராளுமன்ற சட்டத்தின் மூலம் மட்டுமே வரிகளை குறைக்க முடியும். வரவு செலவுத் திட்டத்தில் முதல் திட்டம் செயல்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.