
இன்று முதல் ட்ரோன் கேமரா கண்காணிப்பு
போக்குவரத்தை கண்காணிக்க இன்று (2) முதல் மீண்டும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.