சுவையான காளான் தொக்கு ; இப்படி செய்து பாருங்கள்
சைவ உணவுகளில் சிறந்தது காளான். அந்த வகையில் காளான் மசாலா, கிரேவி, காளான் 65, என்று பலவிதங்களில் சாப்பிடலாம்.
அந்த வகையில் காளான் தொக்கு எப்படி செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- காளான் – 100 கிராம்
- தக்காளி – 1
- பெரிய வெங்காயம் – 1
- உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு
- சீரகம் – 1 தேக்கரண்டி
- தனியாத் தூள் – 2 தேக்கரண்டி
- பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 1
- மிளகு – 1 தேக்கரண்டி
- வெள்ளபை்பூண்டு – ஒரு பல்
தாளிப்பதற்கு
- பட்டை – 1
- இலவங்கம் – 2
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
எவ்வாறு செய்யலாம்?
முதலில் காளானை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
பின்னர் வெங்காயம்,தக்காளியை சிறியதாக வெட்டிக் கொள்ளவும்.
வறுக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் விடாமல் வாசம் வரும் வரையில் வறுத்துக்கொள்ளவும்.
சூடு ஆறியதும் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் நேர்த்து இலவங்கம், பட்டை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
அதனுடன் நறுக்கிய காளானைச் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு வேகவைக்க வேண்டும்.
பின் வறுத்து அரைத்த கலவையைச் சேர்த்து மூன்று நிமிடங்கள் வரையில் வேகவைத்து இறக்கினால் அருமையான காளான் தொக்கு தயார்.