உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் ரஷியாவுடனான போரை நிறுத்த முடியும்

உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் ரஷியாவுடனான போரை நிறுத்த முடியும்

ரஷியா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருகிறது.

சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்து உள்ள ரஷியா, போரில் முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.

மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புதின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் ரஷியாவினால் ஆக்கிரமிக்கப்படாத உக்ரைன் பகுதிகளை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் ரஷியாவுடனான போரை நிறுத்த முடியும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்

மேலும் பேசிய அவர், இதை தான் நாம் முதலில் செய்யவேண்டும். அதன்பின்பு உக்ரைன் தற்போது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை பேச்சுவார்த்தை நடத்த திரும்பப் பெற முடியும் என்று ஜெலன்ஸ்கி கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து உக்ரைன் – ரஷியா போர் நிறுத்தம் குறித்தும் அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சு அடிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )