மல்வத்து ஓயா வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் முகாமைத்துவப் பிரிவினால், மல்வத்து ஓயா குறித்து 2024 நவம்பர் 27ஆம் திகதி விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது என்று நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் மழைவீழ்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஆறுகளின் நீர் மட்டங்களில் ஏற்படும் மாற்றங்களை நீர்ப்பாசனத் திணைக்களம் தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றது.
வெள்ள அபாய நிலைமை ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுமிடத்து, அதுதொடர்பான முன் அறிவிப்புகளை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka