மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு
அநுராதபுரம், கல்கிரியாகம பிரதேசத்தில் நேற்று (27) மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
கல்கிரியாகம , புப்போகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது வீட்டில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka