சீரற்ற காலநிலை பாதிப்புக்கள் ; மக்களிடம் கோரப்பட்டுள்ள உதவி
இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வெள்ள நிவாரண உதவி செயற்திட்டத்தில் உங்கள் பங்களிப்பையும் வழங்குங்கள்.
இந்துக்கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கம் (OBA) தற்போது ஏற்பட்டடுள்ள மழையுடன் கூடிய காலநிலையால் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு வெள்ள நிவாரண நடவடிக்கையை துவங்கியுள்ளது.
கொழும்பு மற்றும் இலங்கையின் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கும் சேர்ப்பிக்கும் முகமாக இவ் நடவடிக்கை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே ஏனைய பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் மீது உங்களின் அன்பும் உதவியும் விரும்பப்படுகிறது.
தேவைகள்:
உலர் உணவுப் பொருட்கள் (அரிசி, பருப்பு, பிஸ்கட் , போன்றவை) அடிப்படை முதலுதவி,(பாம், சமகன் போன்றவை) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார அணையாடைகள் உள்ளிட்டவை
உதவி செய்ய விரும்புவோர், இந்துக்கல்லூரி, பிரதான நுழைவாயில் 77 , Lorenz road Colombo – 4
மற்றும்
விவேகானந்தா வித்தியாலயம் கொழும்பு -13
மற்றும்
Pick and pack,
Gall road, Wellawatta.
என்ற முகவரியில் உள்ள சேகரிப்பு நிலையங்களில் பொருட்களை ஒப்படைக்க முடியும்.
கீழ் இருக்கும் இணையத்தளம் ஊடாகவும் பங்களிப்பு செய்யமுடியும்
https://karuna.lk/program/floo.html
சேகரிப்பு நிலையங்கள்:
இந்துக்கல்லூரி, பிரதான நுழைவாயில்
77 , Lorenz road
Colombo -4
அல்லது
இந்த நிவாரண நடவடிக்கை சமூகங்களுக்கான அவசர உதவிகளை வழங்குவதற்கு நோக்கியது. மேலே குறிப்பிடப்பட்ட சேகரிப்பு நிலையங்களில் நிவாரணப் பொருட்களை ஒப்படைக்கலாம்.
மேலதிக தகவல்களுக்கு, தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:
பிரணவன் (071) 426 9291
தினேஷ் -(075) 564 6809