தேர்தலில் புதிய முகமூடியுடன் களமிறங்கியுள்ள குழுவினர் : வன்முறை கலாசாரம் குறித்து ஹக்கீம் எச்சரிக்கை
தேர்தலில் கடந்த காலங்களில் இந்த நாட்டில் ஜனநாயக ரீதியாக ஆட்சியை கைப்பற்ற முடியாது. ஆயுதம் தாங்கித்தான் நாங்கள் கிளர்ச்சி செய்துதான் ஆட்சியை பிடிக்கவேண்டுமென்று நாடு முழுக்க கொலைக் கலாசாரத்தை அறிமுகப்படுத்தி மக்களுடைய ஜனநாயக உரிமையை பறித்த, தேர்தல்களை பகிஷ்கரித்த, தேர்தலில் பங்கெடுத்த கட்சிகளின் உறுப்பினர்களை கொன்றொழித்த ஓர் இடதுசாரி இயக்கம் ஒரு புதிய முகமூடியுடன் வந்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கிம்தெரிவித்துள்ளார்.
அவர்கள் புதிய முகமூடியுடன் இந்த நாட்டில் ஒரு புது யுகம் படைக்க வேண்டுமென்றால் ஒரு மாற்றம் வரவேண்டுமென்றால் , எங்களுக்கு தாருங்கள் என்று கேட்கிறார்கள்.
அவர்களுக்கு இந்த நாட்டில் பொருளாதாரம் சம்பந்தமாக பேசுவதற்கு இருக்கின்ற ஓரு விடயம் ஊழைல ஒழிப்போம் என்பது மாத்திரம்தான்.
ஆனால் எப்படி ஒழிக்கப்போகின்றனர் என்பதற்கான எந்தெவாரு திட்டமுமே கிடையாது என ரவூப் ஹக்கிம் தெரிவித்தார்