எமது ஆட்சியில் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு பதவிகள் வழங்கப்படமாட்டாது !
சஜித்தின் ஆட்சியில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு 25 சதவீதமான வெளியாட்கள் மாத்திரமே இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்
நேற்று இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்,
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆட்சி மாறும் போது அரசியல்வாதிகள் தங்களுக்கு வேண்டியவர்களை அரசு பணிகளுக்கு நியமிக்கிறார்
இதனால் அனுபவமுள்ள அரச ஊழியர்களின் வேலையே இழக்க வேண்டியுள்ளது
இதனை தடுக்கும் முகமாக எமது ஆட்சியில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு 25 சதவீதமான வெளியாட்கள் மாத்திரமே இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.
மேலும், பாடசாலை ஆசிரியர்களுக்கு மேலதிக பயிற்சிகளுக்கான செலவுகளை அரசு பொறுப்பேற்கும் .
அத்துடன் இலங்கையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெட்ரோலில் இயங்கும் முச்சக்கர வண்டிகளை மின்சாரத்தில் இயக்க சாரதிகளுக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் .
மேலும் எமது ஆட்சியில் அரசியல் தலைவர்களின் உறவினர்களுக்கு வெளிநாட்டு தூதுவர்களாக பதவிகள் வழங்கப்படமாட்டாது என பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்