ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைக்கப்பட வேண்டும்

ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைக்கப்பட வேண்டும்

ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் மகளிர் அணி தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திர வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர், ” அநுரகுமார திஸாநாயக்க தலைமைத்துவத்தை ஏற்ற பின்னரும் ஜே.வி.பி. தோல்வி கண்டது. எனினும், பாரிய மாற்றங்களை அநுர ஏற்படுத்தினார். ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தியாக மாறியது. தனது நடை, உடை என எல்லா வித்திலும் அநுரமாறினார்.

ஜே.வி.பியின் கொள்கைகளும் தகர்த்தப்பட்டன. இறுதியில் இன்று ஆட்சியைக் கைப்பிடித்துள்ளனர். ஜே.வி.பியாகவே இருந்திருந்தால் அவர்களால் இன்று ஆட்சியை பிடித்திருக்க முடியாது.

அதிகாரத்தை பெறுவதுதான் அரசியல்வாதிகளின் இலக்காக இருக்க வேண்டும். எனவே, ஐக்கிய மக்கள் சக்தியும் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
தலைமைப்பதவியில் சஜித் இருக்கட்டும். இரண்டாம் தலைமைத்துவமொன்று உருவாக்கப்பட வேண்டும். உண்மையான சஜித் யார் என்பதை மக்கள் மயப்படுத்த வேண்டும். ஐக்கிய மக்கள் சக்திக்குரிய சமூகஊடகக் கட்டமைப்பையும் வலுப்படுத்த வேண்டும்.”என தெரிவித்துள்ளார் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )