குவைத்தில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

குவைத்தில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

குவைத் இராச்சியத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கள் பயோமெட்ரிக் கைரேகையை வழங்குமாறு அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சகம் விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.

கைரேகைகளை வழங்குவதற்கான இறுதித் திகதி 2024 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குவைத்தில் பணிபுரியும் அனைத்து இலங்கை பணியாளர்களும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, குவைத் இராச்சியத்தை சேர்ந்த “Sahel” மென்பொருளைப் பயன்படுத்தியோ அல்லது  “Matta” எனப்படும் மின்னணு முறை மூலமாகவோ பயோமெட்ரிக் கைரேகையை பதிவு செய்ய நேரம் ஒன்றை ஒதுக்கிக்கொள்ள முடியும்.
மேலும், இணையவழி முறையில் கைரேகைகள் பதிய அருகாமையில் பொருத்தமான இடத்தை தேர்வு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஹவாலி, ஃபர்வானியா, அஹமத், முபாரக் அல் கபீர், ஜஹ்ரா ஆகிய இடங்களில் அமைந்துள்ள பாதுகாப்பு இயக்குனரக அலுவலகங்களில் இது நிறுவப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது தவிர, அலி சபா அல் சலீம், உம் அல்-ஹஹேமான் மற்றும் ஜஹ்ரா பகுதிகளில் அமைந்துள்ள கைரேகைகளை பதிவு செய்வதற்கான ஆட்களை புலனாய்வு செய்யும் திணைக்களத்தில் பதிவு செய்ய முடியும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைரேகையை வழங்காத வெளிநாட்டினரின் அனைத்து அரசு மற்றும் வங்கி நடவடிக்கைகளும் தடை செய்யப்படும் என “தி டைம்ஸ் குவைத்” நாளிதழில் உள்நாட்டலுவல்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )